TN போக்குவரத்து காவல் அபராத ரசீதில் தமிழ் இல்லை - எச்சரிக்கும் MKS
ஆங்கிலத்தில் உள்ள போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிடில் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்..!
ஆங்கிலத்தில் உள்ள போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிடில் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்..!
புதுக்கோட்டை குளவ்சாய்ப்பட்டியில் உள்ள திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் இல்ல விழாவில் கலந்துகொண்ட திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசினார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில்; 1967 - ஆம் ஆண்டிற்கு முன்பு சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. திமுக முதல்முறை ஆசியமைத்த சமயத்தில் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் போக்குவரத்து காவல் அபராத கட்டணத்திற்கு வழங்கப்படும் ரசீதில் தமிழ் இல்லை என குற்றம் சாட்டினார். ஆங்கிலத்தில் உள்ள ரசீதை தமிழில் மாற்றாவிட்டால் திமுக சார்பில் போராட்ட நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் வரும் சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தியை எந்த கொம்பனாலும் புகுத்திவிட முடியாது என்றார். வாரிசுகள் இருப்பவர்கள் தான் வாரிசுதாரர்களாக வர முடியும் என கூறிய ஸ்டாலின், திமுகவை பற்றி தவறாக விமர்சனம் செய்து அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பொதுமக்களை வாட்டி வதைக்ககூடிய ஆட்சி நடைபெற்று வருவதாக சாடிய ஸ்டாலின், விரைவில் அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.