தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்..!
மக்கள் கருத்தை கேட்டறிந்த பின்பே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
மக்கள் கருத்தை கேட்டறிந்த பின்பே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்வி குழுவின் வரைவில், மும்மொழி கொள்கை பிரிவில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று, கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே, "ஒரே பாரதம், உன்னத பாரதம்" முயற்சியை தொடங்கியதாகவும், நிர்மலா சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தொன்மையான தமிழ் மொழியை போற்றி வளர்ப்பதை மத்திய அரசு, என்றும், எப்போதும், முன்னின்று ஆதரிக்கும் என்றும், நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இதேபோன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், இந்தி திணிப்பு விவகாரம் குறித்த தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, கல்விக்குழுவின் வரைவை, மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லும் எனக் கூறியுள்ளார்.
அனைத்து இந்திய மொழிகளையும், வளர்க்கவும், ஊக்குவிக்கவும், நடுவண் அரசு, எல்லா முயற்சியையும் எடுக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எந்த மொழியையும், யார் மீதும் திணிக்கும் எண்ணம், மத்திய அரசுக்கு ஒருபோதும் இல்லை என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடக் கூறியுள்ளார்.