அதிமுக-வின் திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஓப்புதல் வழங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். 


இதையடுத்து, கட்சியின் புதிய விதிமுறைகளின் செயல்பாட்டு திருத்தங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது அதிமுக. சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஏற்றுக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான தகவல்களை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. 


இதை தொடர்ந்து, தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் போராடியாவது கட்சியை மீட்டெடுப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரன் தெரிவித்த்துள்ளார்.