370வது பிரிவு நீக்கத்தால் திமுகவுக்கே லாபம்; ஜம்மு- காஷ்மீரிலும் திமுக சொத்துகளை வாங்கி குவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்று  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து உருவான பதற்றத்தால் பாஜக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது. அதில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் ரத்து செய்தது. 


இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதற்க்கு அதிமுக தரப்பில் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதவு அளித்தன. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்; காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கத்தால் திமுகவுக்கே லாபம். இனி யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் எனும் பட்சத்தில் ஜம்மு காஷ்மீரிலும் திமுக சொத்துகளை வாங்கி குவிக்கும் என கிண்டல் செய்துள்ளார்.