மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை ஏறு தழுவ மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கிவிட்டனர். 


போட்டியில் பங்குபெறும் அடங்கா காளைகளுக்கும், அடக்கும் காளையருக்கும் தங்கம் பரிசாக கிடைக்கும் என்றாலும், வீரத்தை காட்டும் பாரம்பரிய விளையாட்டு அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.


தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் (Alanganallur Jallikattu) நடைபெற்று வருகிரது. அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று அலங்காநல்லூரில் ஏறு தழுவும் போட்டித் தொடங்கியது.


ALSO READ | முகூர்த்த காலுடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி


நேற்றே இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட இருந்த நிலையில், வார இறுதி ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.


கொரோனா தொற்று அச்சம் காரணமாக, மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்தப்படும் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளனர்.  முன்னெச்சரிக்கையாகவும், மருத்துவ உதவிக்காகவும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், 700காளைகளும்  300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதற்காக பதியப்பட்டுள்ளது. 


கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்


போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள்  மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் . போட்டியை காண்பதற்காக 150பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படுகிறது.


மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்திருந்தார். 


பரிசுகளுக்காக மட்டுமல்ல, தங்கள் வீரத்தையும் காட்டுவதற்காக காளையர்கள், காளை பிடி போட்டியில் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டுள்ளனர்.


ALSO READ | எங்களுக்கும் உண்டு பொங்கல்: மகிழும் யானையும் குதிரையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR