மீனவர்களுக்கு எச்சரிக்கை; இன்றைய வானிலை முன்னறிவிப்பு.....
இந்திய கடல், வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....
இந்திய கடல், வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் நிலவி வரும் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. குளிரின் தாக்கம் உதகையில் கடந்த சில தினங்களாக அதிகம் நிலவி வருவதை சுட்டிக்காட்டிய வானிலை ஆய்வு மையம், அங்கு குறைந்தபட்சமாக 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகக் தெரிவித்திருந்தது.
மேலும், கொடைக்கானலில் 7.6 டிகிரி செல்சியஸ்-ம் திருத்தணியில் 14.5 டிகிரி செல்சியஸ்-ம் வெப்பம் பதிவானதாகக் அறிவித்திருந்த நிலையில், இந்திய வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகம் உள்ளது. 40 - 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும்,அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.