கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது உள்ளதாக தகவல்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.


இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் கஜா புயலாக மாறியது. இந்த புயலானது இன்று மாலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புயல் குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா மாறும். 


இந்த புயலானது சென்னை மற்றும் நாகைக்கு 370 கி.மீட்டரில் மையம் கொண்டுள்ளது. மேலும் 14 கிலோ மீட்டர் என வேகம் அதிகரித்து இந்த புயல் நகர்ந்து வருகிறது. 


அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 


பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்.