சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (26) இவரது கணவர் ராஜசேகர் (30) என்பவரை அடையாளம் காட்டக்கூடிய பத்து நபர்கள் இன்று அதிகாலை 2 :45 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு வந்து தனது கணவர் ராஜசேகரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுவிட்டதாகவும் வந்த நபர்களில் ஒருவர் தனது பெயர் தளபதி என்றும், தான் ஒரு வழக்கறிஞர் என்றும் கூறியதாகவும் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராஜசேகர் என்பவர் காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை மூன்று ஆண்டுகளாக நடத்தி வருவதாக தெரிகிறது. தங்கம் குறைந்த அளவில் உள்ள போது அதனை வாங்கி பதுக்கி வைத்து, விலை உயரும்போது விற்பனை செய்யக்கூடிய தொழிலதிபராக ராஜசேகர் செயல்பட்டு வருவது தெரியவந்ததுள்ளது. அதில் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது


கடத்தி சென்ற பிறகு உஷா தனது கணவர் ராஜசேகர் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. இதனால் கடத்திய கும்பலில் ஒருவர் தளபதி வழக்கறிஞர் என தெரிவித்ததால், கணவரின் மற்றொரு செல்போனிலிருந்து பதிவு செய்து வைத்திருந்த தளபதி என்ற கைபேசி எண்ணிற்கு போன் செய்தபோது போனை எடுத்த நபர் உஷாவிடம் உனது கணவர் ராஜசேகர் இங்கு தான் உள்ளார். இனிமேல் அவரை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதனால் உஷா தனது கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பதறிப்போய் இருப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு சென்னை திருமங்கலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் செல் போன் எண்களை வைத்து ட்ரேஸ் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR