விஜய் ரசிகர்களுக்கு வந்தது நல்ல செய்தி! - The Goat சிறப்பு காட்சிக்கு அனுமதி!
The Goat Special Show: நடிகர் விஜய் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் The Greatest of All Time திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The Goat Movie Special Show All Over Tamil Nadu : நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த The Greatest Of All Time திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான அனுமதி தற்போது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என டென்ஷனில் சுற்றி வந்தவர்களுக்கு இது பெரிய ஆறுதலை அளித்துள்ளது எனலாம். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் செப். 5 மற்றும் செப். 6 ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி கடிதம் அளித்திருந்தது. ஆனால், செப். 5ஆம் தேதிக்கான சிறப்பு காட்சிக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதாவது, செப். 5 தேதி மட்டுமே தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கும் நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு மேல் திரையிடல் முடிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இத்திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரோடியுசர் அர்ச்சனா கல்பாத்தி அவரது X பக்கத்தில், தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரியில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது, தற்போது அதுவும் உறுதியாகிவிட்டது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிறப்பு காட்சிகளை அறிமுகமானதே ரஜினி திரைப்படங்களின் மூலம்தான்... அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நடிகர் அஜித்தின் துணிவு பட கொண்டாட்டத்தின்போது, சென்னையில் ஒரு ரசிகர்கள் உயிரிழந்தார்.
இதுபோன்ற அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லையென்பதால் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன. அதன்பின் பல்வேறு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளும் காலை 9 மணிக்கே திரையிடப்பட்டன. நடிகர் விஜய்யின் முந்தைய திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான போதும் காலை 9 மணிக்கே சிறப்பு காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டன. முன்னர் சொன்னது போல், தமிழ் சினிமாவுக்கு அதிகாலை ஷோவை அறிமுகப்படுத்திய ரஜினிக்கே, ஜெயிலர் படத்துக்கு காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டன.
மேலும் படிக்க | தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ