விவசாயி என்றாலே ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல் வருகிறது? - பழனிசாமி!!
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது. அதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக அணை கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்... "பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதுபோல தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழக அரசின் பரிசீலனையில் அது இருப்பதாக குறிப்பிட்டார்.
மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அரசால் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்விக்கு, அதுவும் அரசின் பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் பதிலளித்தார். மாநிலங்களவையில் காலியாகும் 6 தமிழக எம்பிக்கள் பதவிகளில், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கட்சியின் தலைமை கூடி முடிவெடுக்கும் என்றார் அவர். இந்த விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனது சொந்த கருத்தை தெரிவித்திருப்பதாகவும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.