அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது தமிழக அரசு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணை (TN Govt) வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 5.8 லட்சம் ரேஷன் கார்டுகள் (Ration card) சர்க்கரை அட்டைகளாக இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதுபற்றி மாநில அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறைக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார். இதற்காக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடம் சமர்பிக்கலாம். இதையடுத்து தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ | உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா?.. அப்போ உங்களுக்கு ₹.2500 பணம் கிடைக்கும்..!


இந்த சூழலில் பொங்கல் பரிசாக (Pongal bonanza) அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய போது, இப்படியொரு இனிப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வழக்கமாக பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் இரண்டரை மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசு சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில் ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்றே (டிசம்பர் 20) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR