தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. சுமார் 80 மணி நேர போராட்டத்திற்குப் பின் சுஜித், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தை சுஜித் மீட்புப்பணியில் தாமதம் இருப்பதாக தமிழக அரசை எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. 


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கமுடியாதது வேதனைக்குரியது. குழந்தையை நலமுடன் மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுர்ஜித் விவகாரத்தில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது பழி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கூட தெரியவில்லை. ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசை குறை கூறி வருகிறார். குழந்தை விழுந்துவிட்டால் ஆழ்துளை கிணறு அருகேயே செல்லாதவர்கள் திமுக அமைச்சர்கள் என முதல்வர் பழனிசாமி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.  


மேலும், அரசு மருத்துவர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணி வர மறுக்கும் மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது. மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அமைச்சர் அறிவித்தப்படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும். ஒரு மருத்துவரை உருவாக்க தமிழக அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.1.24 கோடி செலவிடுகிறது. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள சொல்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது என தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமான சட்டம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.