ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.


இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி Sterlite ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.


இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் Sterlite குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதையடுத்து, இந்த ஆலோசனைக்கு பிறகு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாது. 


இந்த மனு மீதான விசாரணையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழகியுள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது..!