இனி பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
ஹெல்மெட் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
ஹெல்மெட் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
வாகனங்களில் சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவது தொடர்பான சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு சக்கர வாகனங்களில் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டது.
மேலும், கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த ஹெல்மெட் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த உயர்நீதிமன்றம், வரும் 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.