ஜெ., சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை:HC

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கு விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவுபெற்றபின், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இன்று மீண்டும் விசாரணை செய்தது.
அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்கிற அப்பலோ கோரிக்கையை நிராகரித்தது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அப்பலோ மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்தது உயர்நீதிமன்றம்.
மேலும், 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதால் ஆறுமுகசாமி ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு. உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிகள் தொடரும் எனவும் அவர் தீர்ப்பு வழங்கினர்.