2018-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை உயர் நீதிமன்ற வெளியிட்டது!
2018-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்களின் பட்டியலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2018-ம் ஆண்டிற்கான விடுமுறை தின பட்டியலை அறிவித்துள்ளனர். அதில், ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-29 மகாவீர் ஜெயந்தி, மார்ச்-30 புனித வெள்ளி, ஜூன்-15 ரமலான்,ஆகஸ்டு-15 சுதந்திர தினம், ஆகஸ்டு-22 பக்ரீத், செப்டம்பர்-13 விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர்-21 மொகரம், அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி, அக்டோபர்-18,19 ஆயுத பூஜை, விஜயதசமி, நவம்பர்-21 மிலாடி நபி, டிசம்பர்-25 கிறிஸ்துமஸ் விடுமுறைகள் அறிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில் ஞாயிற்றுக்கிழமை (14.01.2018) தவிர, திருவள்ளுவர் தினமான ஜனவரி-15 மற்றும் உழவர் திருநாளான ஜனவரி-16 தேதிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி வருவதையடுத்து, நவம்பர்-5,6,7 தேதிகளில் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதி முதல் ஜூன் 3 வரை கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையுடன் ஏப்ரல்-30, திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வேலைநாளை சரிசெய்வாதற்காக ஏப்ரல்-28 (சனிக்கிழ்மை) நீதிமன்றம் செயல்படும் என்றும் இதையடுத்து, அக்டோபர்-13 முதல் அக்டோபர்-21 வரை தசரா விடுமுறையும், டிசம்பர்-22 முதல் டிசம்பர்-31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறையும் அறிவித்துள்ளனர்.