அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் - நெகிழ வைக்கும் ஊராட்சி தலைவர்
அரசு பள்ளி மாணவர்களை ஊராட்சி தலைவர் விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றுவந்தார்.
இதனை த்தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னைவரை 110 பேரை விமானத்தில் அழைத்து சென்றவந்தார்.சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் ஊராட்சித் தலைவரை பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள் எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவ ரீதியாக எது தேவையோ அதை செய்துவருகிறார். நாங்கள் விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்தது” என்றனர்.
சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் பேசுகையில், “அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று அரசியல் தலைவர்களாகவும், பெரிய பதவிகளிலும் உள்ளனர். இன்றைய சூழலில் பெற்றோர்களிடையே தனியார் கல்வி பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமையாக உள்ளனர்.ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சிறிதளவு ஊக்குவித்தால் போதும் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகள் இன்னும் அதிகரிக்கும்” என்றார்.
அடுத்தக்கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை மீண்டும் வெள்ளியங்காடு, காரமடை அரசு பள்ளிகளில் சிறந்த முறையில் படித்துவரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்ல ஞானசேகரன் திட்டமிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ