சசிகலா குடும்பத்தினரின் மீது எம்எல்ஏ கருப்பையா காட்டம்!
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு சென்று விட்டதை தொடர்ந்து, தினகரனுக்காக சிறை சாலைகள் காத்து கிடக்கிறது..
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு சென்றுவிட்டதை தொடர்ந்து. நடராஜன், பாஸ்கரனின் ஆகியோரின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. சசிகலா குடும்பத்தினர் 25 பேரின் வாழ்க்கை சிறைச் சாலையில்தான் முடியும். அந்த வரிசையில் தினகரனுக்காக சிறை சாலைகள் காத்து கிடக்கின்றன. அதில் தினகரன் மட்டும் தப்ப முடியாது என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.
மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சன் நியூஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் பழ.கருப்பையா கூறுகையில்,
ஒரு விவசாயி பருவமழையை எதிர்பார்த்து அரசியல் செய்வது போல் நடிகர்கள் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் செய்கின்றனர். நடிகர்களின் அரசியல் என்பது, தேர்தல் வரும் போது கடையை விரிப்பது, வெற்றிபெற்றால் தொடர்ந்து நடத்துவது, இல்லாவிட்டால் மூடிவிட்டு போவது என்கிற மனப்பான்மையோடு செயல்படுகிறார்கள்.
நீங்கள் இப்படிப்பட மனநிலையில் இருந்துவிட்டால் மக்கள் உங்களை எப்படி பின்பற்றுவர்கள் என்றும் கேள்வி எலுப்பியுள்ளார் .
டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்ற பேச்சு 10 ஆண்டுகளாக ஓடுகிறது. ஏதாவது உணர்வு ஒன்று உந்தி தள்ளும்போது அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்து விட வேண்டும். ஆராய்ச்சியெல்லாம் செய்ய கூடாது.
திரையுலகினருக்கு கேளிக்கை வரி பெரிய பிரச்சினையாக இருந்தபோது நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்களில் திரையிடப்படும் புதிய படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின் கேளிக்கை வரியை 10 சதவீதமாக அரசு குறைத்தது. அப்போது கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக முதல்–அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இவர் இப்படிப்பட்ட மனநிலையோடு இருந்தால் ஒரு காலத்திலும் மக்களுக்காக பேசமுடியாது என்று தெரிவித்தார்.