மேட்டூர் அணையின் நீர்மட்டம் கனிசமாக உயர்வு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது. நாள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 மாதங்களுக்குப் 80 அடியை தாண்டியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 12,902 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் போது பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.