தூத்துக்குடி உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது .இந்நிலையில், விழா நடைபெறும் மைதானத்தில், உள்ள எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.பொன்னையன் ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக எம்.பி.,யும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் தனது முக நூல் பக்கத்தில்;- "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். இது குறித்து, மைத்ரேயன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து" என அதிமுக எம்.பி., தம்பிதுரை, " கருத்து தெரிவித்திருந்தார்.


நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார் இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து தொடர்பாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மூத்த தலைவரும், ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த சி.பொன்னையன் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஆகியோர் ஆசீர்வாதத்தால் இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.