தமிழகம், கேரளாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை இந்த முறை தள்ளிபோய் உள்ளது. எனினும் தற்போது வடகிழக்கு பருவமழைக்கான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறயுள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும்  பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் அளவாக வெப்பம் இருக்கும்.


ALSO READ | உங்க வங்கி கணக்கில் 10 பைசா இல்லாட்டி கூட ஷாப்பிங் செயலாம்.. எப்படி?


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்... வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியின் காரணமாக  சென்னையில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக  வாரத்தின் இறுதியில் அதிகமாக மழை பெய்யும். இடையில் கொஞ்சம் விட்டு மீண்டும் இந்த மழை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பசிபிக் கடல் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பருவநிலை மாற்றத்தால் ஒரு வார காலத்துக்கு வட கிழக்கு பருவமழை கடுமையாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் இருந்தே மழை பெய்யும்.  நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி அக்டோபர் 28ம் தேதி தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வட கிழக்கு பருவமழையும் தமிழகம். புதுச்சேரியில் பெய்யத் தொடங்கும். அதேபோல ஆந்திர கடலோரப் பகுதி, தெலங்கானா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, கேரளா பகுதிகளிலும் இன்று  முதல் மழை பெய்யும்.


இதுவரை தமிழகத்தில் பெய்த மழையின் காரணமாக சென்னையில் அதிகபட்சமாக 867 மிமீ மழை பெய்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பெய்யும் வட கிழக்கு பருவமழையால் கிடைக்கும் மழையில் 62சதவீதம் ஆகும். அதாவது கடந்த 6 நாட்களில் கிடைத்துள்ளது. வட கிழக்கு பருவக்காற்று தான் வடகிழக்கு பருவமழையை கொண்டு வருவதாக இருக்கிறது. அது தற்போது வலுவாக உள்ளது. குறிப்பாக தெற்கு கடல் பகுதியில் வலுவாக வீசத் தொடங்கியுள்ளது. தற்போது வடக்கு திசையில் இருந்து வரும் காற்று காலைநேரத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதில் குறைந்த அளவே ஈரப்பதம் தரைப்பகுதியில் கொடுக்கிறது. இந்நிலையில், நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று ஒரு வாரத்தில் மழையை கொடுக்கும். அதன் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கும். குறிப்பாக இன்று முதல்  மழை பெய்யத் தொடங்கும். அதே நேரத்தில் கடலோரப் பகுதியில் காற்று அதிகரிக்கத் தொடங்கி, காலை மாலை நேரங்களில் தமிழகத்தின் உ்ள் பகுதியில் மழை பெய்யும்.