சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்த்தை நடத்தி வருபவர் பாலமுருகன்.  வழக்கமாக காலை 4 மணிக்கு உணவகத்தில் சமையல் பணியாளர்கள் சமையல் செய்வதற்காக பூட்டை  திறந்து பின் பூட்டாமல் ஷட்டரை மட்டும் சாத்தி  விட்டு வாக்கிங் சென்றுவிடுவது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை கண்காணித்து வந்த முதியவர் ஒருவர் அதிகாலை கடையின் உள்ளே நுழைந்து பயபக்தியுடன் கடவுளை வணங்கி நெற்றியில் விபூதி பூசிய பின் திருடும் பணியை தொடங்குகிறார். பணம் வைத்திருக்கும் மேஜை முழுவதும் தேடுகிறார் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தொடந்து சமையலுக்கு இருந்த முட்டைகளில் சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்.



மேலும் படிக்க | WATCH: ‎இளைஞர்களிடையே வைரலாகும் புது வித திருட்டு பிராண்க்...


மேலும், சாப்பிட வந்தவர்கள் தொண்டு  நிறுவனத்திற்கு செலுத்திய உண்டியலை திருடி சென்று விடுகிறார். அதிகாலை சமையல் பணிக்கு வந்த ஊழியர்கள் ஷட்டர் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த ஹோட்டல் உரிமையாளருக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடை ஷட்டர் திறந்து உள்ளது பற்றி  தகவல் தெரிவித்தனர்.  



தனது கடைக்கு வந்த பாலமுருகன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முதியவர் ஒருவர் கடை ஷட்டரை தூக்கி கடைக்குள் இன்று அதிகாலை இருமுறை வந்து தான் வைத்திருந்த பணம், தொண்டு நிறுவன உண்டியல் மற்றும் முட்டைகள், போர்வை ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சிசி டிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் முதியவரை தேடிவருகின்றனர். 


மேலும் படிக்க | கிட்னி திருட்டு வழக்கில் ஈடுபட்ட டாக்டர்கள் 5 பேர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR