மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில்  சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையையும், விவாதத்தையும்  உருவாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில்,  மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்திலேயே உறுதிமொழி ஏற்றோம். உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழிதான் ஏற்கப்பட்டது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என பெயர் மாறலாம்: ஜெயக்குமார்


கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரக அறிவிப்பின்படிதான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அடிப்படையில்  உறுதிமொழி எடுத்தோம்.



நேற்றுதான் மாநில அரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகம் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்கக்கூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது. அவசர கோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம். தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம்.


மேலும் படிக்க | மாணவ, மாணவிகளின் வளர்ச்சி: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகள்


தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரகம் இரண்டு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறியிருந்த நிலையில் மாணவர் பேரவையினர் நாங்களேதான் சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம்.


சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை. உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகம் யாரிடமும் இது குறித்து கேட்காமலயே நாங்களாகவே உறுதிமொழியை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR