பேரிடரின் போது பணியாற்றுபவர்களை பகையாளியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது, ``வேலூர் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை நினைத்த அளவுக்கு அ.தி.மு.க வெற்றி பெறவில்லை. தி.மு.க குடும்பத்தில் பிரச்னை நடைபெற்று வருகிறது. அவர்கள் கட்சிக்குள் மட்டுமே மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் இருக்காது. நீலகிரி மாவட்டம் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இயற்கை இடர்பாடு வரும்போது நீயா நானா என்று செயலாற்றி வருகிறார்கள், எங்களை பகையாளியாகத்தான் பார்க்கிறார்கள். அந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும்.


நீலகிரி மக்களுக்கு உடனடித் தேவைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளோம். அங்கு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு நிச்சயம் செய்யும். வளர்ச்சிக்காக  செல்லும் தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை நல்ல விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். ஸ்டாலின் தன் தலை முடியை சரி செய்ய வெளிநாடு செல்கிறார். நானும் செல்லலாம். ஆனால் செல்லவில்லை. அ.தி.மு.க அரசு மக்களுக்கான அரசு. கூவத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும்” என்று தெரிவித்தார்.