நான் யார் தெரியுமா? குடிபோதையில் சக போலீசாரிடமே ரகளை செய்த காவலர்
மது அருந்திக்கொண்டே கார் ஓட்டிய காவலர் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதம். காரை பறிமுதல் செய்த போலீசார்.
கரூர் செய்திகள்: கரூரில் போக்குவரத்து காவலர் குடிபோதையில் அட்டகாசம் செய்தது மட்டுமில்லாமல், பொதுமக்கள் மற்றும் சக காவலரை தகாத வாரத்தியால் பேசு மற்றும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட நீதிமன்றம் அருகில் குடிபோதையில் காரில் அதிவேகமாக சென்ற காவலர் அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் மீது உரசி விட்டு தப்ப முயன்றவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் பிடித்து கேள்வி கேட்டதற்கு அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் போலீசாரையும் தாக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட நீதிமன்றம் அருகில் ஷிப்ட் கார் ஒன்றில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வந்த அந்த கார் அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது உரசி விட்டு நின்றது. பொதுமக்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் காரில் வந்தவரை சிறைபிடித்து பார்த்த போது காரை ஓட்டி வந்தவர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகநாதன் என்பதும் மது அருந்திக்கொண்டே கார் ஓட்டியதும் தெரிய வந்தது.
அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்த போது காரில் வந்த காவலர் பொதுமக்களையும் காவல்துறையினரையும் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். ஆனால் காவலர்கள் மிகப் பொறுமையாக நடந்து கொண்டனர். அதேபோல மக்களையும் மிரட்டியுள்ளார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பலரும் தங்களது செல்போனில் அங்கு நடப்பவற்றை பதிவு செய்வதைகண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இச்சம்பவதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகியதால் தான் தோன்றிமலை போலீசார் காரை பறிமுதல் செய்து காவலர் லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்ற ஒரு சம்பவம், கடந்த வாரம் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை குடிபோதையில் இளைஞர் ஒருவர் அடித்து உடைக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதனையடுத்து அவர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது ஆல்கஹால் விஷயத்திற்கும் பொருந்தும். குடிப்பது மிகவும் தவறு. அதையும் மீறி குடித்தால், அளவோடு குடியுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR