“பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.



அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துவருகிறது. ஆனால் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா உறுதியாக இருப்பதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.


மேலும் படிக்க | காங்கிரஸ்-க்கு பிரசாந்த் கிஷோரின் ‘மான்ஸ்டர்’ பிளான்! 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் இவரா?


இதற்கிடையே இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் களம் இறங்கினர். மேலும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் இதுகுறித்து டெல்லி தலைமைக்கு கடிதம் எழுத தமிழக தலைமை தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.



இந்நிலையில், இளையராஜாவின் முன்னுரைக்கு பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இளையராஜாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி முன்னுரை எழுதியதற்கு நன்றி என கூறியதாக சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR