சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், கிண்டி, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்தமழையால் மக்கள் மகிழ்ச்சி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று வழக்கமான வானிலை நீடித்தது. இதையடுத்து, 3 மணி அளவில் திடீரென்று வானிலையில் மாறுதல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, திருவல்லிக்கேணி, அண்ணாநகர், அரும்பாக்கம், திருமங்கலம் என பல பகுதிகளில் திடீர் மழை பெய்யத் தொடங்கியது. 10 நிமிடங்களுக்கு நீடித்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. 


இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். இருப்பினும் பொது மக்கள் மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் வானிலையே குளிர்ச்சியாகிவிட்டது. 


விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.