என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்ற பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: என்னைப்போல் ஜெ.பேரவையினர் தன்னலமற்று பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுகவின் கிளையான அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 


இதில் ஆர்.பி.உதயகுமார், கடம்புர் ராஜூ, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட பவ்வேறு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும், ஜெயலலிதா நினைவிட பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைசர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்ற பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர்  பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களால் முயன்ற நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.