உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்சியில் இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இதையடுத்து, கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது. 


இந்நிலையில், அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; அதிமுகவில் ஒற்றைத் தலைமை  என்பது தேவையில்லாத சர்ச்சை. அதிமுகவில் பிரச்சினை வருமா என எதிர்பார்த்தவர்கள்  ஏமாற்றமடைந்துள்ளனர். கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான ஒன்று தான், இது மரியாதை நிமித்தமானது. அதிமுக தலைமை குறித்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்காதது குறித்து அவர்கள் தலைமை கழகத்திற்கு முறையாக தகவல் தந்து உள்ளனர் என கூறினார்.