தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள். ஆனால் இம்முறை கொரோனாவால் தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கும், கூட்டுறவு இந்த உத்தரவு பொருந்தும். மேலும் ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுகிறது இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. தற்போது, வீட்டுக் கண்காணிப்பில் 29,056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர். மேலும் ஒரே நாளில் 60 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 54.11 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.27 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.