தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்காததால் மாணவர்கள் ஏமாற்றம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது" என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நம்பிக்கை பாழாகி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியது உள்ளிட்ட குற்றங்களைச் செய்த சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.