தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் ரஜினி காந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்ததால், நேரில் ஆஜராக நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், ஏற்கனவே 18 கட்ட விசாரணைகளை முடித்துள்ளது.


இந்நிலையில் 19 ஆம் கட்ட விசாரணையை துவங்க உள்ள ஆணையம், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சமயத்தில் அதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, வரும் 25 ஆம் தேதி நேரில் அஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பி உள்ளது.