மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 


இந்நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். கைத்தறி பொருட்களுக்கு GST வரியை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 



மேலும் அவர் பேசுகையில், நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சேகரிப்பு மையங்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் கொண்ட பிரமாண்ட உணவுப்பூங்கா உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.