எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த 11-ஆயுள் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 166 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4-ம் கட்டமாக 11-ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.


அதன்படி, முன்னதாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதற்கட்டமாக 10-ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 67 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர், கடந்த 12-ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, 47 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த ஜூன்-20-ல் விடுதலை செய்யப்பட்டனர். 


இந்நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து 11-ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார்.