அம்மா உணவகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சில இடங்களில் அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழை மக்கள், வருமானம் ஈட்ட கஷ்டப்படுபவர்கள் என வருவாய் இல்லாதவர்கள் பயனடையும் விதத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிய திட்டம் அம்மா உணவகம். வெளிநாடுகளும் கூட வியந்து பார்த்து பாராட்டிய திட்டம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதனை அமல்படுத்த எண்ணி, அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். 


இந்நிலையில் தமிழகத்திற்கான 2018-2019 ஆண்டின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக நிதித்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படுவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த நிதித்துறை செயலர், அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம், மற்ற பொருடகள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது.


திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சென்னார்கள். ஆனால் இப்போது நஷ்டம் வந்து விட்டது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளே அம்மா உணவகங்களை நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவங்கள் மூடப்பட்டது என்று கூறினார்.