விமானத்தில் வந்த முள்ளம் பன்றி மற்றும் குரங்கு!
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரியவகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் டாமரின் குரங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது.அதில் வந்த பயணிகளையும், உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவரிடம் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடை ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள் அதை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றியும்,டாமரின் மங்கி எனக்கூறப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டியும் இருந்துள்ளது.இதனை தொடர்ந்து, அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | ரூட்டு தல : மாணவர்கள் பைகளில் பட்டா கத்திகள்
அப்போது அவர், வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக வாங்கி வந்ததாக கூறியுள்ளார்.ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்றால் இரு நாட்டு அனுமதியும் பெற்றிருக்க வேண்டும் எனக்கூறிய அதிகாரிகள், இளைஞரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த விலங்குகளை இந்தியா கொண்டுவரும்போது முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றிதளும் இல்லை எனக்கூறப்படும் நிலையில் அந்த விலங்குகளை அதிகாரிகள் தாய்லாந்திற்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும், விலங்குகளை கடத்தி வந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | ‘ஸ’ தமிழ் எழுத்தா ? - அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் ஓவியத்தில் மற்றொரு சர்ச்சை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR