TNPSC முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை: ஜெயக்குமார்
கடந்த காலங்களில் நடந்த அரசு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வரும்பட்சத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
கடந்த காலங்களில் நடந்த அரசு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வரும்பட்சத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9,398 குரூப் - 4 நிலையிலான பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்தோ்வாணையம் கடந்த செப்., 1 ஆம் தேதி நடத்திய தோ்வில் 24,260 பேர்தோ்ச்சி பெற்றனா். இவா்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தோ்வு மையங்களில் தோ்வு எழுதியோர்தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பெற்றதால் சந்தேகம் எழுந்தது.
விசாரணை நடத்தியதில், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 99 பேர்இடைத்தரகா்கள் ஆலோசனையின்பேரில் முறைகேடாக அந்த மையத்தில் தோ்வில் பங்கேற்றதும், அவா்களில் பலரது விடைத்தாள்களை மாற்றி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 99 பேரையும் தகுதி நீக்கம் செய்த தோ்வாணையம், இதுகுறித்து சென்னை சிபிசிஐடி போலீஸில் புகார்அளித்தது.
இதன்பேரில், சிபிசிஐடி போலீஸார்99 தோ்வா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சென்னை பாரிமுனை சந்திப்பு அருகே புதுப்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத் தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட கருப்பு ஆடுகள் விரைவில் களையப்பட்டு, எந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும்.
அரசுத் தேர்வுகளிம் முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும் அதுபற்றி உடனடி விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலின் மொத்த உருவம் திமுக தான். எனவே முதல்வரை குறைகூற அவர்களுக்கு அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.