தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 3 மாதங்கள் முடிவடையாத நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது; எனினும் தற்போது அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தில் அலட்சியத்தால் பாலித்தீன் கவர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.


முன்னாதக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, தமிழகத்தில் 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்போது, இருப்பு வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்து ஒரு முயற்சியாக இந்த தடை உத்தர்வு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதன்படி தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதல்கட்டமாக, அபராதம், தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், 'சீல்' வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பொருட்கள் மறைமுகமாக பயன்பாட்டில் இருந்தது. இதனால், கடைகளில் பாலித்தீன் கவர்களின் பயன்பாடு குறைந்தது. கடைகளில் காகிதங்களின் பயன்பாடு அதிகரித்தது. ஓட்டல்களில் வாழை இலை, மந்தார இலைகளின் பயன்பாடு அதிகரித்தது. பலர் எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்துச் சென்று இறைச்சி வாங்கினர். 


இந்நிலையில் தற்போது அதிகாரிகள் அலட்சிய போக்கால் கடைகளில் மீண்டும் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுமக்களும் படிப்படியாக பாலித்தீன் பைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் குவளை, ஜூஸ் கடைகளில் உறிஞ்சு குழல்கள் பயன்படுத்திவருகின்றனர். 


எனவே, அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், பயன்படுத்துவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.