மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,000 கன அடியிலிருந்து 32,421 கன அடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,000 கன அடியிலிருந்து 32,421 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,000 கன அடியிலிருந்து 32,421 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 14.83 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்ந்து வருவதால் அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு சுமார் 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது!.
அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர்.