வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வேப்பசலனம் காரணமாக சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிவருகிறது! 


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!


'தென்மேற்குப் பருவக்காற்று ஈரப்பதத்துடன் வீசிய காரணத்தாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. அதே நிலை இன்றும் நீடிப்பதால் மழை தொடரும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.