சிலிண்டரை திறந்துவிட்டு ஊரையே அலறவிட்ட பெண்
மணலி அருகே பெண் ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த சிலிண்டர்களை திறந்து வைத்து 9 மணி நேரம் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மணலி ஈவேரா பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா. இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி பலமுறை கண்டித்தும் ரமேஷ் கேட்காததால் ஆத்திரம் அடைந்த ரேணுகா, தீடிரென வீட்டிற்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 3 சிலிண்டர்களையும் திறந்து விட்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | நெல்லையில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து - என்ன நடந்தது ?
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், முதற்கட்டமாக ரேணுகாவின் வீட்டை சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். அது மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர்களும் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ரேணுகாவிடம் பேச்சு வார்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது. சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போலீஸார், மயங்கிய நிலையில் இருந்த ரேணுகாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | சென்னையில் அரங்கேறிய சாத்தான்குளம் சம்பவம்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR