சென்னையில் பைக் ரேஸ் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. பொதுவாக புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் பொது இடங்களில் நடக்கும் பைக் ரேஸ் தற்போது தினமும் நடந்துவருகிறது. இளைஞர்கள் படுவேகமாக செல்வதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் இந்த ரேஸால் ஏகப்பட்ட விபத்துக்கள்,  உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அந்த வகையில் தாம்பரம் அருகே வண்டலூரில் இளைஞர்கள் ரேஸ் சென்றதால் பெண் உயிரிழந்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாம்பரம்  வெளிவட்ட சாலையில்  இரண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது அதே சாலையில் வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி பலத்த காயத்தால் பெண் உயிரிழந்தார். 3 வண்டிகளில் 5 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுப்பட்டதாகவும், அப்போது பெண் மீது இளைஞர் மோதியதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | திருச்செந்தூர் விசாகத் திருவிழா... இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்


அதுமட்டுமின்றி அப்பெண்ணை மோதிய இளைஞர் கீழே விழுந்ததில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் முடிச்சூரைச் சேர்ந்த விஸ்வா (25) என்பது தெரியவந்திருக்கிறது. ரேஸில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் அடிபட்டு இறந்த பெண் மற்றும் கால் முறிவு ஏற்பட்ட நண்பரை கண்டுகொள்ளாமல் தப்பிச் சென்றதாக தெரிகிறது. 


இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற நபர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் ஓட்டேரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் படிக்க | விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 காவலர்கள் பலி - இருட்டில் என்ன நடந்தது?


அதேபோல் காயமடைந்துள்ள இளைஞரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிட்லபாக்கம்  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் தப்பிச் சென்ற மற்ற இருவரை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.


இதற்கிடையே உயிரிழந்த அந்தப் பெண்ணின் கைப்பையை சோதனையிட்டபோது போலீஸ் கேண்டீன் கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என பெயர் இருந்தது. எனவே விபத்தில் உயிரிழந்தது காவல் ஆய்வாளர் செல்வகுமாரியா அல்லது வேறு யாருமா என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR