பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!
வங்கியில் பணப்பையை திருடும் நோக்கில் தவறுதலாக வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிச்சென்ற நபரின் செயல் வேடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.
நாமக்கல் :தற்போது அதிகமாக வங்கிகளில் கொள்ளை சம்பவம் நடந்து வருவது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வங்கியில் கொள்ளை, ATM-ல் கொள்ளை என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இங்கு நடந்த கொள்ளை சம்பவம் ஒன்று காமெடியாக மாறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் SBI (State Bank of India) வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த SBI வங்கிக்குள் மர்ம நபர் ஒருவர் சாதாரணமாக உள்ளே நுழைந்து, வங்கியின் செயல்பாடு குறித்து நீண்ட நேரம் நோட்டமிட்டு கொண்டிருந்தார். அதிக கூட்ட நெரிசல் இல்லாத அந்த சமயத்தில் வங்கியிலுள்ள கேஷியரின் அறை திறந்திருந்தது.
ALSO READ | காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி விட்டு தப்பி ஓடிய பிரபல சாராய வியாபாரி!
அந்த சமயத்தில் திடீரென்று திறந்திருந்த கேஷியரின் அறைக்குள் அந்த மர்ம நபர் நுழைந்தார். அந்த அறைக்குள் ஒரு பை மட்டும் இருந்துள்ளது, அதனை பார்த்த அந்த நபர் தான் கையில் வைத்திருந்த ஒரு பைக்குள், அந்த அறையிலிருந்த பையை எடுத்து உள்ளே போட்டு கொண்டார். அந்த நேரத்தில் திடீரென்று கேஷியர் தனது அறைக்குள் நுழைந்தார்.
அதனையடுத்து கேஷியரின் வருகையை கண்டு அதிர்ந்த அந்த நபர், தான் தெரியாமல் இந்த அறைக்குள் நுழைந்துவிட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டுவிட்டு உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மத்திய உணவு இடைவேளையின் போது உணவருந்துவதற்காக கேஷியர் அவரின் உணவுப்பையை தேடினார், ஆனால் எங்கு தேடியும் அந்த உணவுப்பை அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் கேஷியரின் அறைக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் உணவு இருந்த பையை, பணப்பை என தவறுதலாக நினைத்து திருடி சென்றது தெரியவந்தது. இந்த நிகழ்வு வேடிக்கையானதாக இருந்தாலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | ஹெச்.ராஜா மீது கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR