இந்திய அளவில் சிறந்த காவல் நிலைய பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ம் இடத்தை பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 


> அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 
> குஜராத் மாநிலத்தின் பாலசினார் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்தது. 
> மத்தியபிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் காவல் நிலையம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
> இந்த வரிசையில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.


அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட காவல் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.