வடமாநிலத்திலேயே தாமரை மலரவில்லை; இங்கு எப்படி மலரும்: திருநாவுக்கரசர்
நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, தமிழகத்தில் எப்படி மலரும்? என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம்.....
நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, தமிழகத்தில் எப்படி மலரும்? என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம்.....
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்றுகாலை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெருவருகிறது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம்என்எப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், BJP-ன் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது என தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், ராகுல்காந்தியின் சுற்றுப் பயணம், கடும் உழைப்பு ஆகியவை நல்ல பலனைத் தந்துள்ளன.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். RSS உள்ளிட்ட அமைப்புகளின் கருவறையிலேயே பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. BJP-வுக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல்காந்தி என்பதும் நிரூபணமாகியுள்ளது.
காங்கிரசுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் வகையில் முடிவுகள் அமைந்துள்ளன. பாஜகவோடு சேர்வதற்கு எந்த கட்சியும் முன்வரவில்லை என்ற மனச்சோர்வில் தமிழிசை பேசுகிறார். காங்கிரசோடு 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.