தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற மனம் இருக்கு; பணம் இல்லையே -அமைச்சர் ஜெயக்குமார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.


இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வரத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற மனம் இருக்கு, ஆனால் பணம் இல்லையே. தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் கே.வி.குப்பத்தில் பசுமை வீடுகள் கட்டித்தர்பாடும் என்றும் தெரிவித்துள்ளார்.