சிசிடிவி கேமராக்கள் இல்லை- டாக்டர் பீலே
அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சிசிடிவி கேமராக்கள் பற்றி கேட்டப்போது, இல்லை. மருத்துவமனைக்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஜெயலலிதாவை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம்.
ஜெயலிதாவுக்கு அருகில் இருந்தவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. அரசியல் அழுத்தத்தால் அவருக்கு அளித்த சிகிச்சை அப்போது வெளியிடவில்லை. இரண்டு மாதங்களாகியும் சந்தேகம் தீரவில்லை என்பதால் தற்போது பதில் அளிக்கும் நிலையில் இருக்கிறோம். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை.