சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மழை வளத்தில் தென்மேற்கு பருவ மழைக்கு மிக்கிய  பங்கு உள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவ மழை இன்று கேரளாவில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திரிச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு கேரளாவில், தென்மேற்கு பருவமழை இயல்பை விட 23 சதவீதம் அதிகமாக பெய்ததால் அம்மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளன.


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும். சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.