விவசாய கடன் ரத்து செய்வதில் மாற்றம் இல்லை- திருமாளவன்!!
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் விவசாய மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை என அவர் கூறினார்.
மேலும் அவர், தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடியது என்றும் குற்றம்சாற்றியுள்ளார்.