ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.


தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியது:- மத்திய அரசை விமர்சிப்பதால் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. முதலீடு மீதான புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்படுகிறது.


மடியில் கனம் இல்லாவிட்டால் எதற்காக பயப்பட வேண்டும். வருமான வரித்துறை சோதனைக்கும் பாஜக-வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.